



உலகமெல்லாம் போற்றப்படுவது சைவ சமயம். சைவத்திருத்தல நகரம் திருவண்ணாமலை. எந்நாட்டவருக்கும் இறைவன் தென்னாடுடைய சிவன். அந்த சிவப்பெயர்களில் சிறந்து ஓங்குவது அண்ணாமலையண்ணல்.
திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.
இந்தப் பிரபஞ்சம் இயங்க ஐந்து பெரும் சக்திகள் தேவை.நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற இந்த பிரிவுகளை பஞ்சபூதம் என்று சொல்கிறார்கள்.பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற இந்த ஐந்து பஞ்ச பூதங்களுக்கும் தலம் அமைத்து நம்முன்னோர் வழிபட்டு ஆனந்த பரவசம் எய்தினர். இவற்றில் 'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது.
பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது.
கூடுதல் தகவல்கள் ›உலகமெல்லாம் போற்றப்படுவது சைவ சமயம். சைவத்திருத்தல நகரம் திருவண்ணாமலை. எந்நாட்டவருக்கும் இறைவன் தென்னாடுடைய சிவன்.
கூடுதல் தகவல்கள் ›நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் சாதுக்கள் சத்திரம், அன்னசத்திரம், வேதபாடசாலை, ஓயா மடம் ஆகிய சத்திரங்களை திருவண்ணாமலையில் நிறுவி உள்ளார்கள்.
கூடுதல் தகவல்கள் ›தினசரி திருக்கோயிலுக்கு வரும் 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 23.03.2002 முதல் செயல்பட்டு வருகிறது.
கூடுதல் தகவல்கள் ›